பாலக்காட்டில் மேலும் ஓர் உலக சாதனையாளர் கட்டிட கலையில் சாதனை பாலக்காடு : பாலக்காட்டில் வசிக்கும் திரு. அழகுராஜா என்பவர் வீனஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். இவர் " இளம் வயதில் மிக அதிக தனித்துவமான 3D கட்டிட வடிவமைப்புகள் உருவாக்கப்பட்ட சாதனை " என்ற பிரிவில் உலக சாதனை படைத்துள்ளார், இச்சாதனைக்கான அங்கீகார விழா 10.10.2020 சனிக்கிழமையன்று பாலக்காடு ஹோட்டல் சுல்தான் ஆஃப் பிளவர்ஸ் - ல் நடத்தப்பட்டது. யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெகார்டஸ் மற்றும் ஃப்யூச்சர் கலாம்ஸ் புக் ஆஃப் ரெகார்டஸ் என்ற இரு உலக சாதனை புத்தகங்களும் அதன் கேரள மன்ற தலைவரும் மற்றும் உலக சாதனையாளருமான முனைவர் திரு.வி.பாலசுப்பிரமணி அவர்களும் இணைந்து இவ்விழாவின் அங்கீகாரங்களை வழங்கினர். இவ்விழாவில் SK பிலிம்ஸ்-ன் தயாரிப்பாளர் திரு. சாதிக் அலி, பாடகி செல்வி. கிரீஷ்மா கண்ணன், வடக்கந்தர கவுன்சிலர் திருமதி. சுமதி, ஐ ஃபோகஸ் விஷுவல் மீடியா நிறுவன மேலாளர் செல்வி. அஞ்சலி ஜெகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும் திரு. செல்வம், திரு. ராஜா மற்று...